குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் 15 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUL 2024 4:55PM by PIB Chennai

குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில், 15 கோடியே 54 லட்சத்து 40 ஆயிரத்து 865 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக இத்துறைக்கான மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்ஜி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், கடந்த 3 ஆண்டுகளில் 3 கோடிய 86 லட்சத்து 16 ஆயிரத்து 232 குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 504 குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 8 ஆயிரத்து 793 கோடியே 71 லட்சம் ரூபாய் அளவுக்கு மானிய உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஜிதன் ராம் மஞ்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்    https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038536

***

MM/AG/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2038735) வருகையாளர் எண்ணிக்கை : 66
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Hindi_MP , Punjabi