நிதி அமைச்சகம்
2023-24-ம் நிதியாண்டில் ரூ. 36,374 கோடி மதிப்புள்ள 9,190 போலி உள்ளீட்டு வரி வரவு கணக்குகள் கண்டுபிடிப்பு
प्रविष्टि तिथि:
29 JUL 2024 5:42PM by PIB Chennai
நாட்டில் 2023-24-ம் நிதியாண்டில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியம் மேற்கொண்ட ஆய்வில், ரூ.36,374 கோடி மதிப்புள்ள 9,190 போலி உள்ளீட்டு வரி வரவு கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற மோசடிகளை தடுக்க மத்திய ஜிஎஸ்டி விதிமுறைகள் 2017-ல் துணை விதி 4A சேர்க்கப்பட்டிருப்பதுடன் 9-வது விதியிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038602
***
MM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2038715)
आगंतुक पटल : 81