ஜல்சக்தி அமைச்சகம்
அமிர்த நீர்நிலைகள் இயக்கம்
प्रविष्टि तिथि:
29 JUL 2024 2:51PM by PIB Chennai
மத்திய அரசின் அமிர்த நீர்நிலைகள் இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 68,863 நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் சௌத்ரி கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமிர்த நீர்நிலை இயக்கம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி தொடங்கப்பட்டது. தில்லி, சண்டிகர், லட்சத்தீவு நீங்கலாக ஏனைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 75 நீர்நிலைகளை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் அமைக்கும் நோக்கத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மொத்தம் 50,000 அமிர்த நீர்நிலைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இத்திட்ட செயலாக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த நீர்நிலைகள் அருகே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ந் தேதி, ஜனவரி 26-ந் தேதி ஆகிய தேதிகளில் தேசியக் கொடியை மக்களின் பங்கேற்புடன் ஏற்ற திட்டமிடப்பட்டது.
மாநில வாரியாக உருவாக்கப்பட்ட, புனரமைக்கப்பட்ட அமிர்த நீர்நிலைகளின் எண்ணிக்கையை அளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் 2488 நீர்நிலைகளும், புதுச்சேரியில் 152 நீர்நிலைகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
***
PKV/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2038664)
आगंतुक पटल : 75