ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அளவுக்கு அதிகமான நிலத்தடி நீர் பயன்பாடு

Posted On: 29 JUL 2024 2:47PM by PIB Chennai

நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மத்திய அரசு தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி வழங்கி வருவதாக மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சௌத்ரி  தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த ஒரு பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், உலகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதை மத்திய அரசு அறியும் என்றார்.

உலகில் கிடைக்கும் நன்னீரில் 4 சதவீதம் இந்தியாவில் உள்ள நிலையில், உலகின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதமாக உள்ள இந்திய மக்களின் தண்ணீர் தேவைகள் இதன் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

நிலத்தடி நீர் ஆய்வு மதிப்பீட்டு அறிக்கை 2023-ன் படி, நாட்டில் பயன்படுத்த தக்க மொத்த நிலத்தடி நீர் அளவு, ஆண்டுக்கு 407.21 பில்லியன் கனமீட்டராகவும், எடுக்கப்படும் தண்ணீரின் அளவு ஆண்டுக்கு 241.34 பில்லியன் கனமீட்டராக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் பிரச்சனை என்பதால் அதனை ஒழுங்குபடுத்துதல், நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் மாநில அரசையே சார்ந்தது என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். எனினும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு உதவியாக மத்திய அரசு, தேசிய தண்ணீர் கொள்கை 2012, சிக்கனமான தண்ணீர் பயன்பாட்டு அமைவனம், மத்திய நிலத்தடி நீர் ஆணையம், ஜல்ஜீவன் இயக்கம், ஜல்சக்தி அபியான், அடல் பூஜல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் திரு ராஜ் பூஷன் சௌத்ரி  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்    https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038422   

***

MM/AG/KR/DL


(Release ID: 2038632)