புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தொலைநோக்குத் திட்டம்
Posted On:
29 JUL 2024 2:53PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் நான்கு முக்கிய தரவு தயாரிப்புகளான தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள், நுகர்வோர் விலைக் குறியீடு, தொழில்துறை உற்பத்தி குறியீடு மற்றும் தொழில்துறை வருடாந்திர ஆய்வு ஆகியவற்றின் காலத் தொடர் தரவுகளைக் கொண்ட e-Sankhyiki தளத்தை 2024 ஜூன் 29 அன்று தொடங்கியுள்ளது.
அனைத்துத் திட்டங்களும், குறிப்பிட்ட இலக்குகளின் அடிப்படையில் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மத்திய துறை மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களுக்கான உற்பத்தி விளைவு கட்டமைப்பை தயாரிக்க அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கட்டமைப்பு திட்டத்தின் நோக்கங்கள் அல்லது 'விளைவுகளை' அடைவதற்கான அளவிடக்கூடிய குறிகாட்டிகளை வழங்க அரசு முயற்சிக்கிறது. இது தொடர்பாக நித்தி ஆயோக் ஆண்டுதோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறது.
ரூ.150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பீட்டில் நடைமுறையில் உள்ள மத்திய துறை உள்கட்டமைப்புத் திட்டங்களும், திட்டக் கண்காணிப்பின் முக்கிய அளவீடுகளின் அடிப்படையில் இந்த அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட நிதி வழங்கல் நடைமுறையை அமல்படுத்த இ-சாக்ஷி போர்ட்டல் / கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2038631)
Visitor Counter : 47