வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பருவமழைக்காலங்களில் நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கு

Posted On: 29 JUL 2024 1:08PM by PIB Chennai

பருவமழைக்காலங்களில் நகர்ப்புறங்களில்ஏற்படும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கிவருவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு தொக்கான் சாஹூ தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், அரசியல் சாசனத்தின் 12-வது அட்டவணைப்படி நகர்ப்புற திட்டமிடல், நிலம் மற்றும் கட்டுமானப் பணிகளை ஒழுங்குபடுத்துதல் போன்றவை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாக உள்ளது. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள், மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்/ நகர்ப்புற  வளர்ச்சி ஆணையங்களால் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு ஆலோசனைகளை வழங்குவதுடன், நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் மாநிலங்களுக்கு அளித்து வருகிறது.

அம்ருத் இயக்கத்தின் கீழ் இதுவரை பல்வேறு மாநிலங்களிலும் ரூ.2,140 கோடி மதிப்பிலான 772 மழைநீர் வடிகால் திட்டங்கள் முடிக்கப்பட்டிருப்பதுடன், 19 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ரூ.878 கோடி மதிப்பிலான 69 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் விளைவாக 3,556 தண்ணீர் தேங்கும் இடங்கள் அகற்றப்பட்டிருப்பதுடன், மேலும் 372 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இது தவிர, அமிருத் திட்டத்தின் கீழ் 9 நீர்நிலைகளில் ரூ.71.19 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் மற்றும் கிணறுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்க இதுவரை 2,713 நீர்நிலைகளை புனரமைப்பதற்காக ரூ.5,432 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் திரு தொக்கான் சாஹூ தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2038333)

MM/AG/KR



(Release ID: 2038416) Visitor Counter : 35