சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காடுகள் பாதுகாப்புக்கு நிதியுதவி
Posted On:
29 JUL 2024 12:19PM by PIB Chennai
டேராடூனில் உள்ள இந்திய வனவியல் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட இந்தியாவில் வனப்பரப்பு பற்றிய அறிக்கை 2021-ல், நாட்டின் வனப்பரப்பளவு 7,13,789 சதுர கி.மீ. யாக உள்ளது என்றும், இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 21.71 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவநிலை நிகழ்வுகள் மிக உச்சத்தை எட்டியுள்ளன. உள்ளூர் அளவில் மிக அதிக மழை பெய்தல், வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுவதுடன் புயலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
பருவ நிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் வாயிலாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு ஊறுதிபூண்டுள்ளது. இதற்கு ஏதுவாக தேசிய பசுமை இந்தியா இயக்கம், ஒருங்கிணைந்த வன உயிரின வாழ்விட மேம்பாடு ஈடுசெய் வனமயமாக்கல் நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம், நகர்ப்புற வனத்திட்டம் மற்றும் கடலோர வாழ்விடங்களுக்கான மாங்குரோவ் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் வாயிலாக மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த நிதியுதவி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், காடுகளுக்கு வெளியே மரக்கன்றுகள் நடுவதன் வாயிலாக சூழலியல் மீட்டெடுப்பு, வன நிலப்பரப்பை மீட்டெடுத்தல், வாழ்விட மேம்பாடு மற்றும் மண் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
2021-ம் ஆண்டு ஆய்வின்படி தமிழ்நாட்டில் மொத்த நிலப்பரப்பு 1,30,06,000 ஹெக்டேராகவும், இதில் வனப்பரப்பு 26,41,900 ஹெக்டேராகவும் உள்ளன. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 21.31 சதவீதமாகும்.
தேசிய ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஆண்டு திட்ட செயல்பாட்டு நிதி ஒதுக்கீடு கடந்த 2018-19 முதல் 2024-25 (ஜூலை 1 வரை) வரை ரூ.428.998 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மத்திய நிதியுதவியுடன் கூடிய வன உயிரின வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.3281.4796 லட்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற காடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2446.22 லட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வரதன் சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2038299)
MM/AG/KR
(Release ID: 2038413)