சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பாலைவனமாதலை தடுப்பதற்கான தேசிய செயல் திட்டம்
Posted On:
29 JUL 2024 12:10PM by PIB Chennai
இந்தியா பங்கேற்றுள்ள பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா மாநாடு மற்றும் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயல் திட்டம் 2023, 2030-க்குள் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதற்கான நாட்டின் உறுதிப்பாடுகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது.
நிலச் சீரழிவு மற்றும் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வு மற்றும் தடுப்பு மாதிரிகளின் வகைப்பாட்டின் கீழ் குறிப்பான மாதிரிகள் மற்றும் நிலம் சீரழிவு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான புதிய முயற்சிகள் பற்றிய விவரங்களை இத்திட்டம் மேலும் பரிந்துரைக்கிறது.
பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயல் திட்டம், 2023, நாட்டில் உள்ள அனைத்து காடு வளர்ப்புத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒருங்கிணைந்த, திறமையான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பிட்ட நிலப்பரப்பில் கிடைக்கும் வனம் மற்றும் இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மையை நிவர்த்தி செய்வதில் இது கவனம் செலுத்துகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 2038292)
LKS/KPG/KR
(Release ID: 2038409)
Visitor Counter : 73