சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிரான தயார்நிலைக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
26 JUL 2024 6:01PM by PIB Chennai
நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், பொது சுகாதார அவசரநிலைகளுக்கு எதிராக முழுஅளவில் தயாராகும் வகையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்த அவர், ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தின் (ஐஎச்ஐபி) கீழ், நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தை (ஐடிஎஸ்பி) அமைச்சகம் பலப்படுத்தியுள்ளது என்றார்.
இந்த ஐடிஎஸ்பி யானது, தொற்றுநோய் குறித்த தகவல் வந்தவுடன் தேவையான பொது சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பயிற்சியளிக்கப்பட்ட ஒழுங்காற்றுக் குழுக்களை கொண்டு நாடு தழுவிய அழைப்பு மையங்கள் வாயிலாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. மேம்பட்ட தரவு மாதிரி மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் இந்த தளம் ஏற்றதாகும். தற்போது தொற்றுநோய்களின் தீவிர தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை எந்நேரமும் தெரிந்துகொள்ளும் வகையில் இதில் நிகழ்நேர தரவுகள் பயன்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
*****
VK/DL
(रिलीज़ आईडी: 2038074)
आगंतुक पटल : 90