வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்கு போக்குவரத்தில் பசுமை தொழில்நுட்பம் ஊக்குவிப்பு

Posted On: 26 JUL 2024 5:09PM by PIB Chennai

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வளங்குன்றா பசுமை தொழில்நுட்பத்தை அரசு அங்கீகரித்துள்ளது.

நீடித்த சரக்கு போக்குவரத்தை  மேம்படுத்துவதற்கு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தானியங்கி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பிரதமரின் கதிசக்தி தேசிய முன்னோடி திட்டமானது (என்எம்பி) தொழில்துறை உற்பத்தியை மேம்படுத்துவதை வலியுறுத்துகிறது என்றார்.  நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்குபோக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து என பல்நோக்கு போக்குவரத்தில்  பசுமை  திட்டங்கள் மற்றும்  சுத்தமான எரிசக்திக்கான  இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நவீனமயமயமாக்கப்பட்ட தேசிய சரக்குபோக்குவரத்து கொள்கை (என்எல்பி 2022)   டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  தேசிய சரக்குபோக்குவரத்து கொள்கை குறைந்த செலவிலான  மறுசூழற்சி செய்யக்கூடிய பொருட்களை ஆதரிக்கிறது.

 நிலக்கரி, சிமெண்ட், உரம், எஃகு, மருந்து போன்ற பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளுக்கான திறமையான சரக்குபோக்குவரத்து திட்டம் (SPEL) தேசிய தளவாடக் கொள்கையில் கவனம் செலுத்துகிறது . சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலக்கரி சரக்குபோக்குவரத்து திட்டம் ஓரிடத்தில் இருந்து கடைசியாக உள்ள இடத்திற்கு நிலக்கரியை ரயில் மூலம் கொண்டு செல்லும் போது ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும்.  ஆண்டுக்கு சுமார் 100,000 டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

*****

VK/DL


(Release ID: 2038068) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP