ஜவுளித்துறை அமைச்சகம்

உலகத்தரத்தில் பிரதமரின் 7 ஜவுளி பூங்காக்கள்

Posted On: 26 JUL 2024 5:15PM by PIB Chennai

ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய  ஒருங்கிணைந்த 7 மெகா ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அதில் ஒன்று விருதுநகரில் அமைய உள்ளது.

இதற்காக   2027-28 ஆம் ஆண்டு  வரை  ஏழு ஆண்டுகளுக்கு ரூ.4,445 கோடி இதற்கு ஒதுக்கப்படும். ஒவ்வொரு பூங்காவும் கட்டி முடிக்கப்படும் போது நேரடியாக 1 லட்சம் பேருக்கும் மற்றும் மறைமுகமாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகரில் பிரதமரின் மித்ரா  திட்டத்தை செயல்படுத்துவதற்காக, பிரதமரின் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பூங்கா மற்றும் ஆயுத்த அடை பூங்கா லிமிடெட் தமிழ்நாடு என்ற நிறுவனத்தில் 51  சதவீத பங்குகளை தமிழக அரசு வைத்துக்கொண்டு மீதமுள்ள  49 சதவீத பங்குகள் மத்திய அரசிடம் இருக்கும். நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குநரகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மனைக்கான அனுமதி பெறுவதற்கான செயல்முறை நிறைவடைந்துள்ளது.  பூங்காவிற்கான தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்கும் செயல்முறை நடந்து வருகிறது. பூங்காவில் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இதுவரை கையெழுத்திடப்பட்டுள்ளது.

*****

VK/DL



(Release ID: 2037916) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP