நிதி அமைச்சகம்

மத்திய பட்ஜெட்டில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்

Posted On: 24 JUL 2024 6:34PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டின்  பொருளாதார வளர்ச்சிக்கு தொலைநோக்கு பாதையை அமைத்துள்ளார்.

இந்த பட்ஜெட் "அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்" என்ற மையப்பொருளில் கவனம் செலுத்துகிறது.  இது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் சந்தைகள் மற்றும் துறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளில் முக்கிய சீர்திருத்தங்களை பட்ஜெட் கோடிட்டுக் காட்டுகிறது.

மாநிலங்களுக்கு இடையிலான ஆரோக்கியமான போட்டி மற்றும் நீடித்த பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது. பணியிடத்தில் பெண்களின் அதிக பங்களிப்பை எளிதாக்குவதற்கு அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்துறையினருடன்  இணைந்து பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தை விடுதிகளை நிறுவுதல், அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த பெண்கள் சார்ந்த திறன் திட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான சுயஉதவி குழு  நிறுவனங்களுக்கான சந்தை அணுகலை ஊக்குவித்தல், பெண்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த முன்முயற்சிகள் மூலம், அரசாங்கம் உடனடி வேலைவாய்ப்பு தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், நீண்டகால திறன் மேம்பாடு மற்றும் வேலை உருவாக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குகிறது என்று  மத்திய நிதி அமைச்சர் கூறினார்.

 

*****

VK/DL



(Release ID: 2037914) Visitor Counter : 61


Read this release in: English , Hindi , Hindi_MP , Manipuri