கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சபஹர் துறைமுக மேம்பாடு
Posted On:
26 JUL 2024 3:18PM by PIB Chennai
ஈரானின் சபஹரில் உள்ள ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகத்தை நீண்டகால முதன்மை ஒப்பந்தத்தின்படி இந்தியா மேம்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 10 ஆண்டு காலத்திற்கு இதை மேம்படுத்த இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளது.
2016-17ம் நிதியாண்டு முதல் 2023-24-ம் நிதியாண்டு வரை இதற்காக மொத்தம் ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சபஹரில் உள்ள ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகத்தை மேம்படுத்த இதுவரை ரூ. 201.51 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்தத் துறைமுகத்தில் 2023-24-ம் ஆண்டில் கப்பல் போக்குவரத்தில் 43 சதவீதமும் சரக்குப் பெட்டக கையாளுதலில் 33 சதவீதமும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இத்துறைமுகம் முழுமையாக செயல்படத் தொடங்கியவுடன் கடல்சார் வர்த்தகமும் வணிக வருவாயும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்ற வளர்ச்சி அடிப்படையிலான ஒப்பந்தம் மியான்மருடனும் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2024-2025-ம் நிதியாண்டில் சிட்வே (மியான்மர்) திட்டத்திற்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(Release ID: 2037906)
Visitor Counter : 59