சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதித்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முன்னேற்றம்
Posted On:
26 JUL 2024 1:23PM by PIB Chennai
சார்நிலை நீதிமன்றங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்ததாகும். நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நிதியுதவி பெறும் திட்டத்தின் (CSS -சிஎஸ்எஸ்) மூலம் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதி ஆதாரங்களை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், நீதிமன்றக் அறைகள், அரங்கங்கள் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், வழக்குரைஞர் அறைகள், கழிப்பறைகள், மின்னணு கணினி அறை ஆகியவை கட்டப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நீதித்துறை உள்கட்டமைப்பின் முன்னேற்றம் நியாய விகாஸ் போர்டல் 2.0 மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த இணைய தளத்தின்படி, நீதிபதிகளுக்காக மாவட்ட, சார்நிலை நீதிமன்றங்களில் 23,074 நீதிமன்ற அரங்குகளும் 20,889 குடியிருப்புகளும் தற்போதுவரை கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 7,256 நீதிமன்ற அரங்குகளும் 10,678 குடியிருப்புகளும் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்பு கட்டப்பட்டுள்ளன. மேலும், 3,022 நீதிமன்ற அரங்குகளும் 2,493 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்ற அரங்குகளின் எண்ணிக்கை 1242.
தற்போது கட்டப்பட்டு வரும் அரங்குகள் 40. தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்ற குடியிருப்புகளின் எண்ணிக்கை 1363. தற்போது கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 7.
இந்தத் தகவலை மத்திய சட்டத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
*****
PLM/DL
(Release ID: 2037903)