சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் வட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன

Posted On: 26 JUL 2024 1:22PM by PIB Chennai

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் விதிமுறைகளின்படி கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களுக்கு உட்பட்டு, மாவட்ட சட்ட சேவை மையங்களை நிறுவ முடியும். 

அனைத்து கிராமங்களுக்கும், அல்லது கிராமங்களின் தொகுப்பிற்கும், அத்தகைய கிராமங்களின் அளவைப் பொறுத்து,இந்த மையங்களை நிறுவலாம். அவை கிராம சட்ட பராமரிப்பு, ஆதரவு மையம் என்று அழைக்கப்படும்.

சட்ட சேவை நிறுவனங்களை அணுகுவதில் புவியியல், சமூக  தடைகளை மக்கள் எதிர்கொள்ளும் பகுதிகளில் இந்த மையங்களை அமைக்கலாம். 

சட்ட உதவி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் சமுதாயத்தில் நலிவடைந்த, விளிம்பு நிலையில் உள்ள பிரிவினரின் உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் திட்டத்தின் கீழ் வட்டம், மாவட்டம், மாநில, தேசிய அளவில் தொடர் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023-24  நிதியாண்டில் 4,30,306 என்ற எண்ணிக்கையிலும் 2024-25ம் நிதியாண்டில் மே மாதம் வரையில் 54,671 என்ற எண்ணிக்கையிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.  இதில் முறையே 4,49,22,092 நபர்களும் 49,62,765 நபர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சட்டத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)  திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

PLM/DL

 



(Release ID: 2037902) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP