மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
திறனை மேலும் அதிகரித்துக்கொள்ள 18.56 லட்சம் பேர் பதிவு
प्रविष्टि तिथि:
24 JUL 2024 5:49PM by PIB Chennai
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா, தொழில் நுட்பங்களை மேம்படுத்து வதிலும், மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும் முதன்மையான நாடாக மாறியுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எஸ். ஜிதின் பிரசாத் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், சமீபத்திய அறிக்கைகளின்படி செயற்கை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாட்டில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது என்றார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு திறன் ஊடுருவல் விகிதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறமை செறிவு ஆகியவற்றில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பதை ஸ்டன்போர்டு செயற்கை நுண்ணறிவு குறியீட்டெண் 2024 எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திறன் ஊடுருவல் 2.8 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா (2.2) மற்றும் ஜெர்மனியை (1.9) விஞ்சியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வழக்கமான பணிகளை தானியங்கி முறையில் மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவு பயன்படக்கூடும். இதற்காக செயற்கை நுண்ணறிவு உட்பட 10 புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் வேலை வாய்ப்புக்காக அதிக திறமையான பணியாட்கள் தேவைப்படுவார்கள். அவர்களுக்காக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பணியாளர்களின் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள FutureSkills PRIME என்ற வலைதளத்தில் இதுவரை, 18.56 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர். இதில் 3.37 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தங்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியை ஏற்கெனவே முடித்துவிட்டனர் என்ற தகவலையும் அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.
-----
VK/DL
(रिलीज़ आईडी: 2037757)
आगंतुक पटल : 81