பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் திட்டம்
Posted On:
24 JUL 2024 6:07PM by PIB Chennai
குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதற்காக மத்திய அரசு மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் ஊட்டச்சத்து உள்ளடக்கிய உணவு மற்றும் அவற்றின் விநியோகத்தில் உத்திகளை கடைபிடிப்பதன் வாயிலாக குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் உடல்நலக்குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும் என்றார். இத்திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு அதாவது 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பருவப் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்கள் வாயிலாக துணை ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. கோதுமை, செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவுத்தானியங்கள் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
குழந்தைகள் (ஆறு மாதங்கள் முதல் 6 வயது வரை) மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கோதுமை அடிப்படையிலான ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் வாயிலாக இவை விநியோகம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
*****
VK/DL
(Release ID: 2037753)