வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் தொடங்குவதை எளிதாக்க நடவடிக்கை

Posted On: 26 JUL 2024 1:58PM by PIB Chennai

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன  சரக்குகள் திட்ட நடைமுறைகளை, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் எளிமைப்படுத்தியுள்ளது.

பரிவர்த்தனை செலவுகளை குறைத்து, எந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் பயனடையும் விதமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கி, இந்தியாவின் உற்பத்தி போட்டித் திறனை அதிகரிப்பது என்ற  மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  ஏற்றுமதியாளர்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் மூலதன சரக்குகளை, தொழிற்சாலையில் நிறுவியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்கும் எனவும், மத்திய வர்த்தக தொழில்துறை தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் https://www.dgft.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்:

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037378

***

MM/RS/DL



(Release ID: 2037746) Visitor Counter : 24