கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் சாகர் மாலா திட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன

Posted On: 26 JUL 2024 4:26PM by PIB Chennai

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் சாகர் மாலா திட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் திரு கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி, ஒய் எஸ் அவினாஷ் ரெட்டி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து 29 புதிய திட்ட ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும், ரூ.3,300 கோடி ரூபாய் மதிப்பில் துறைமுக மேம்பாடு, கடலோர சிறுதுறைமுகங்கள் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் என்றும் கூறினார். சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.2500 கோடி நிதியுதவி கோரி  ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து 13 திட்ட ஆலோசனைகள் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசத்திற்கான 22 திட்டங்கள் ரூ.2530 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், ரூ.2070 கோடி மதிப்பிலான 14 திட்டங்களின் பணி பல்வேறு நிலைகளில் இருப்பதாகவும் திரு சோனாவால் கூறினார்.

கடல்சார் சிறப்பு கல்வி மையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், ஆசியாவிலேயே முதலாவதாக விசாகப்பட்டினத்தில் இத்தகைய மையம் ஒன்று அமைக்கப்பட விருப்பதாகவும், இதில் 10,000-க்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல்,  தொழில்நுட்ப திறன்களை பெறுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037516

***

SMB/AG/DL



(Release ID: 2037743) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP