உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிசிடிஎன்எஸ் திட்டம்

Posted On: 24 JUL 2024 5:08PM by PIB Chennai

குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தரவுகளை சேகரித்தல், அவற்றை மேம்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு  செய்ய குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலையமைப்பு முறை (CCTNS) உதவுகிறது என்று உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த திட்டத்தை செயல்படுத்துவற்கான பணிகள் 2018 மார்ச் 31 ஆம் தேதி நிறைவுற்றதாக அவர் கூறினார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2080.5 கோடி மதிப்பீட்டில் தடய அறிவியல் திறன்களை நவீன மயமாக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்  கீழ் தடய அறிவியல் வசதிகளை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் நவீன சாதனங்களை கொண்டு நடமாடும் தரமான தடயவியல் பரிசோதனை கூடங்களை நிறுவுவதற்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்றார்.

 நாட்டில் தடய அறிவியல் தொடர்பான  படிப்புகளை விரிவாக்குவதன் மூலம் இது தொடர்பான  ஆய்வகங்களுக்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் எளிதாக  கிடைப்பார்கள்.  இதுவரை,  18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடய அறிவியல் ஆய்வகங்களை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் சுமார் ரூ.186.12 கோடியும்,  நடமாடும் தடயவியல் பரிசோதனை கூடங்களை ஏற்படுத்த ரூ.159.12 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

*****

VK/DL


(Release ID: 2037714) Visitor Counter : 44


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP