எரிசக்தி அமைச்சகம்
பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மின் கட்டணம்
Posted On:
25 JUL 2024 5:12PM by PIB Chennai
மின்சார சட்டம், 2003-ன் படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோருக்கான சில்லறை விற்பனை செய்யப்படும் மின்சாரத்திற்கான மின் கட்டணத்தை நிர்ணயிக்கிறது.
தற்போது நாடு முழுவதும் ஒரே சீரான மின்சாரக் கட்டணத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், மின்சார பரிமாற்றங்கள் மூலம் அரசு போட்டியை ஊக்குவித்து வருகிறது. மின்சாரப் பரிமாற்றத்தில் நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத் தொகுதிக்கு சீரான கட்டணம் கண்டறியப்படுகிறது. இதன்படி, மின் இணைப்பகங்களிலிருந்து மின் பகிர்மான நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கு, சந்தைப் பிரிவினையை தவிர்த்து, மின்சாரத்தின் விலை சீராக உள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
************
LKS/KPG/KR/DL
(Release ID: 2037698)
Visitor Counter : 40