எரிசக்தி அமைச்சகம்
ஊரகப் பகுதிகளில் மின் விநியோகம்
Posted On:
25 JUL 2024 5:06PM by PIB Chennai
நாட்டில் போதுமான அளவு மின்சாரம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 214237 மெகாவாட் உற்பத்தித் திறனை அதிகரித்து, மின் பற்றாக்குறை என்ற முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், நமது நாட்டை மின் பற்றாக்குறையிலிருந்து போதுமான மின்சாரம் என்ற நிலைக்கு மாற்றியுள்ளோம். மார்ச் 2014-ல் 248554 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தித் திறனை 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 446190 மெகாவாட்டாக 79.5% அதிகரித்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மற்றும் நடப்பு ஆண்டு ஜூன் 2024 வரை நாட்டில் உள்ள மின் விநியோக நிலை குறித்த விவரங்கள் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளித்து, ஊரகப் பகுதிகளில் துணை மின் பகிர்மானம் மற்றும் மின் பகிர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 18,374 கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. மேலும், மின்சார வசதி இல்லாத அனைத்து வீடுகளுக்கும் சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார வசதி அளிக்கப்பட்டது.
மேலும், விடுபட்ட வீடுகளுக்கு மின்சார வசதி வழங்குவதற்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் புதுப்பிக்கப்பட்ட பகிர்மானத் துறை திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது.
ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், மின்சார வசதி இல்லாத 6.84 லட்சம் வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மின் பகிர்மானத் திட்டத்தின் கீழ், 6,089 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் ஒருங்கியல் விஷயமாக இருப்பதால், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மத்திய துறையில் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலமும், அவற்றிலிருந்து குஜராத் மாநிலம் உட்பட பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மின்சாரத்தை ஒதுக்கீடு செய்வதன் மூலமும் மத்திய அரசு, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு துணைபுரிகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
****
LKS/KPG/KR/DL
(Release ID: 2037695)
Visitor Counter : 39