கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
புதிய துறைமுகங்கள் தொடக்கம்
Posted On:
26 JUL 2024 1:59PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் வதாவன் பகுதியில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக தேவைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், வதாவன் பகுதியின் இயற்கை சாதகங்கள் காரணமாகவும், அங்கு துறைமுகம் அமைக்கப்பட உள்ளது.
இதேபோன்று, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குட்பட்ட கிரேட் நிக்கோபார் தீவில், முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள கலாத்தியா வளைகுடாவில், சர்வதேச சரக்குப் பெட்டகம் மாற்று முனையம் அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது உள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் பட்டியலையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழகத்தில் 3 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3 சிறிய துறைமுகங்கள் உள்ளன.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 22 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037381
***
MM/RS/DL
(Release ID: 2037686)