ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது
Posted On:
26 JUL 2024 2:52PM by PIB Chennai
நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான பிரத்யேக திட்டங்களான பாரம்பரிய கிரிஷி விகாஸ் யோஜனா வடகிழக்கு பிராந்தியத்தில் கரிம மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றை அரசு 2015-16 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ், இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மை சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இயற்கை வேளாண் உற்பத்தி முதல் சந்தைப்படுத்தல் வரை. பண்ணை நிலத்திலேயே இயற்கை உர உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளிப்பது இந்தத் திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் உள்ளிட்ட பல்வேறு கரிம இடுபொருட்களுக்காக விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விவசாய யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.15,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், சந்தை மேம்பாட்டு உதவி கரிம உரங்களை ஊக்குவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை உரங்களான நொதித்த இயற்கை உரம், பாஸ்பேட் செறிந்த இயற்கை உரம் ஆகியவை நியாயமான விலையில் கிடைக்க இயலும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நவீன வேளாண் தொழில்நுட்பத்திற்கான அணுகலை வழங்கவும் இந்திய அரசு நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போட்டியில், உரத்துறை உர நிறுவனங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களின் நமோ ட்ரோன் சகோதரிக்கு 1,094 ட்ரோன்களை விநியோகம் செய்வதை உறுதி செய்துள்ளது. 2023 நவம்பர் 15, அன்று தொடங்கப்பட்ட வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரையின் போது, பல்வேறு பயிர்களில் நானோ மற்றும் நீரில் கரையக்கூடிய உரங்களை தெளிப்பதற்காக 1.79 லட்சம் ட்ரோன் பயன்பாடுகள் செயல்விளக்கம் செய்யப்பட்டன.
உயிர் உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு பயிர்கள் மற்றும் மண் வகைகளுக்கேற்ற மேம்படுத்தப்பட்ட மற்றும் திறமையான உயிர் உரங்களை உருவாக்கியுள்ளது. அதிக ஆயுட்காலம் கொண்ட திரவ உயிர் உர தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு வகையான உயிர் உரங்கள் / உயிரி செறிவூட்டப்பட்ட கரிம உரங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. செயல்விளக்கம், உழவர் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் இவை ஊக்குவிக்கப்படுகின்றன. உயிரி உரங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பயிற்சி அளிக்கிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
PKV/KV/DL
(Release ID: 2037632)
Visitor Counter : 53