அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கண்டறிய புதிய கணக்கீட்டு மாதிரி

प्रविष्टि तिथि: 25 JUL 2024 3:07PM by PIB Chennai

கர்ப்பப்பை வாய் டிஸ்ப்ளாசியா அல்லது கருப்பை வாயின் மேற்பரப்பில் அசாதாரண செல் வளர்ச்சியின் நோயறிதலை மேம்படுத்தக்கூடிய ஒரு புதிய கணக்கீட்டு மாதிரி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ளது.

 

கர்ப்பப்பை வாய் செல் டிஸ்ப்ளாசியாவைக் கண்டறிவதற்கும் நிர்வகிப்பதற்கும் துல்லியமான மாதிரி அடையாள வகைப்பாடு முக்கியம்.

 

அறிவியல், தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) தன்னாட்சி நிறுவனமான , அறிவியல்,  தொழில்நுட்ப  உயர் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் சக்திவாய்ந்த ந்திரக் கற்றல் (எம்.எல்) கட்டமைப்பை உருவாக்க வெவ்வேறு வகை மாதிரிகள், உருமாறும் நுட்பங்கள், பிரதிநிதித்துவத் திட்டங்களோடு வகைப்பாடு முறைகள் ஆகியவற்றைப் பரிசோதித்தனர். இந்தப் பரிசோதனை கர்ப்பப்பை வாய் டிஸ்ப்ளாசியாவைக் கண்டறிவதற்கான உகந்த கலவையை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டது.

 

மாதிரியின் செயல்திறன் இரண்டு தரவுத்தொகுப்புகளில் சோதிக்கப்பட்டது: ஒன்று இந்தியாவில் உள்ள சுகாதார மையங்களிலிருந்து சேகரிக்கப்பட்டது மற்றொன்று பொதுவில் கிடைக்கக்கூடிய தரவுத்தொகுப்பு.

 

இந்தக் கண்டுபிடிப்பு, கர்ப்பப்பை வாய் டிஸ்ப்ளாசியா கண்டறிதலில் புரட்சியை ஏற்படுத்துவதோடு கணக்கீட்டு மாதிரியின் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

 

இது மாதிரி கர்ப்பப்பை வாய் டிஸ்ப்ளாசியாவைக் கண்டறிவதில் புரட்சியை ஏற்படுத்தும். நோயறிதல் துல்லியம் மற்றும் மேம்பட்ட சிகிச்சை விளைவுகளுக்கான மிகவும் துல்லியமான கருவிகளை சுகாதார நிபுணர்களுக்கு வழங்கும்.

இணைப்பு:https://doi.org/10.3390/math10214126

****



(Release ID: 2036843)

 

LKS/KPG/KR


(रिलीज़ आईडी: 2037543) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Hindi_MP , हिन्दी