குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி
Posted On:
25 JUL 2024 5:01PM by PIB Chennai
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி ஆகியவற்றில் எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது. இத்துறையில் சிறிய பொருட்கள் உட்பட பல்வேறு வகையான தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறையிலிருந்து ஏற்றுமதியை அதிகரிக்க, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் சர்வதேச ஒத்துழைப்பு (IC) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச கண்காட்சிகள், வாங்குபவர்-விற்பவர் சந்திப்புகளில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்க வசதி செய்யப்படுகிறது. இத்துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்துவதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஜூன் 2022-ல் தொடங்கப்பட்ட ஏற்றுமதியாளர்களின் திறன் மேம்பாடு என்ற திட்டத்தின் புதிய அம்சத்தின் கீழ், குறு, சிறு நிறுவன ஏற்றுமதியாளர்களுக்கு, பதிவு, உறுப்பினர் சான்றிதழ், ஏற்றுமதி காப்பீட்டு பிரீமியம், ஏற்றுமதிக்கான சோதனை - தர சான்றிதழ் ஆகியவற்றில் ஏற்படும் செலவுகள் திருப்பிச் செலுத்தப்படுகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பன்னாட்டு சந்தைகளை அணுகுவதை அதிகரிக்க இந்த நடவடிக்கைகள் உதவுகின்றன.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் நாடு முழுவதும் 60 ஏற்றுமதி உதவி மையங்களை அமைத்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
(Release ID: 2036985)
PLM/KR
(Release ID: 2037520)
Visitor Counter : 45