குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் உதவித் திட்டங்கள்
Posted On:
25 JUL 2024 5:07PM by PIB Chennai
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், காதி - கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) மூலம் காதி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் காதி கைவினைஞர்களுக்கு நிதி உதவி வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு நிதியுதவித் திட்டம் எனப்படும் எம்எம்டிஏ திட்டத்தின் கீழ், பருத்தி, உல்லன், பாலிவஸ்திரா போன்ற கதர் நிறுவனங்களின் கைவினைஞர்களுக்கு 35% ஊக்கத்தொகையும், கதர் நிறுவனங்களான பட்டு நிறுவனங்களுக்கு 30% ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
கதர் கைவினைஞர்களுக்கான தறிக்கூட திட்டத்தின் கீழ், கைவினைஞர்களுக்கு தனிப்பட்ட தறிக்கூடம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
நெசவாளர்கள், நூற்போர், இதர கைவினைஞர்களுக்கு நவீன திறன் பயிற்சிகளையும் கருவி உபகரணங்களையும் வழங்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது, காதி- கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் புதிய பயிற்சித் திட்டங்கள் போன்றவை இந்த திசையில் சில புதிய நடவடிக்கைகளாகும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
(Release ID: 2036997)
PLM/KR
(Release ID: 2037512)
Visitor Counter : 63