ஜல்சக்தி அமைச்சகம்
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கூடுதல் சிறப்பு (ஓடிஎஃப் பிளஸ்) கிராமங்களாக அறிவிப்பதற்கான அளவுகோல்கள்
Posted On:
25 JUL 2024 4:18PM by PIB Chennai
திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத கிராமம் என்ற நிலையின் அடுத்த நிலையை எட்டும் கிராமங்களுக்கு ஓடிஎஃப் பிளஸ் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. திட, திரவக் கழிவு மேலாண்மையை உறுதி செய்து பார்வைக்கு தூய்மையான கிராமங்களாக உள்ள கிராமங்கள் ஓடிஎஃப் பிளஸ் என வரையறுக்கப்படுகிறது.
ஓடிஎஃப் பிளஸ் கிராமங்களில் கீழ்க்கண்ட நிலைகள் உள்ளன:
ஓடிஎஃப் பிளஸ் நிலையை அடையும் நிலையை நோக்கிய கிராமங்கள்: ஒரு கிராமம் அதன் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன் திடக்கழிவு மேலாண்மை அல்லது திரவக் கழிவு மேலாண்மை என ஏதாவது ஒன்றிற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ள நிலை
ஓடிஎஃப் பிளஸ் விரிவாகும் கிராமம்: ஒரு கிராமம் அதன் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், திடக்கழிவு மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மை ஆகிய இரண்டிற்கும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ள நிலை
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைத் தக்க வைத்துக் கொண்டு, திடக்கழிவு மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மை ஆகிய இரண்டிற்கும் ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு கிராமம் பார்ப்பதற்குத் தூய்மையைக் கடைப்பிடிக்கிறது. அதாவது குறைந்த குப்பை, குறைந்த தேங்கிய கழிவுநீர், பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படாத நிலை போன்றவை.
அனைத்து ஓடிஎஃப் பிளஸ் அளவுகோல்களையும் பூர்த்தி செய்த ஒரு கிராமம், கிராம சபைக் கூட்டத்தில் தங்களை ஓடிஎஃப் பிளஸ் என்று சுயமாக அறிவித்துக் கொள்ளும். முதன்முறையாக ஓடிஎஃப் பிளஸ் ஆக அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் அந்த கிராமத்தில் மூன்றாம் தரப்பு கட்டாய சரிபார்ப்பை உறுதி செய்ய வேண்டும். வட்டார, மாவட்டம், மாநில அளவில் பொறுப்பான அதிகாரிகளால் சரிபார்ப்பு செய்யப்படலாம்.
பொருளாதார ஆய்வறிக்கை, 2023-24-ன்படி, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஓடிஎஃப், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஓடிஎஃப் பிளஸ் கிராமங்களில் நோய்கள் குறைவாக உள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இதனைத் தெரிவித்தார்.
----
(Release ID: 2036953)
PLM/KR
(Release ID: 2037509)
Visitor Counter : 53