உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்

Posted On: 24 JUL 2024 5:06PM by PIB Chennai

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2020-2022 இடையே கடத்தலுக்காக போதை மருந்துகளை வைத்திருந்த குற்றத்திற்காக தேசிய போதை மருந்துகள் மற்றும் மனநலப் பொருட்கள் சட்டம் 1985இன் கீழ் மாநிலம் / யூனியன் பிரதேச வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

 

போதைப்பொருள் கடத்தலில் டார்க்நெட், கிரிப்டோ கரன்சிகள் மற்றும் பார்சல் / கூரியர் ஆகியவற்றின் பயன்பாடு  இருப்பது தெரிய வந்துள்ளது. 2020-2024  ஆண்டுகள் இடையே (ஏப்ரல் வரை) பார்சல் / கூரியர் சம்பந்தப்பட்ட 1025 வழக்குகளும், டார்க் நெட் மற்றும் கிரிப்டோ-நாணயங்கள் சம்பந்தப்பட்ட 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் வருமாறு:-

* போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையைக் கையாளும் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க முகமைகளுக்கிடையேயான நடவடிக்கைகளில் திறம்பட ஒருங்கிணைப்பை மேற்கொள்ள நான்காவது நிலை என்.சி.ஏ.ஆர்.டி அமைப்பை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

* ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசங்களிலும் ஏ.டி.ஜி / ஐ.ஜி அளவிலான காவல்துறை அதிகாரி தலைமையில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு (ஏ.என்.டி.எஃப்) அமைக்கப்பட்டுள்ளது.

* போதைப்பொருள் சட்ட அமலாக்கம் தொடர்பான தகவல்களுக்கான என்.சி.ஏ.ஆர்.டி  தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

* போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை குடிமக்கள் புகாரளிக்க 1933-  உதவி எண்ணை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

* டார்க்நெட்டில் போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க டார்க்நெட் மற்றும் கிரிப்டோ நாணயத்திற்கான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

போதைப் பொருள் பயன்பாட்டுப் பிரச்சினையை எதிர்கொள்ள, போதை மருந்து தேவையை குறைப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அதன்படி இளைஞர்களிடையே காணப்படும் போதைப் பொருள் பழக்கத்தை தடுப்பதற்காக நீடித்த மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

BR/KR

***



(Release ID: 2037502) Visitor Counter : 44


Read this release in: English , Hindi , Hindi_MP