இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஒலிம்பிக் பயணம், ஒரு பார்வை

Posted On: 24 JUL 2024 6:43PM by PIB Chennai

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு வளமான வரலாற்றைப் பெருமைப்படுத்துகின்றன, இது விளையாட்டு மற்றும் கலாச்சாரத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது. கி.மு 776 இல் தோன்றிய பண்டைய விளையாட்டுகள், ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை  ஜீயஸ் கடவுளின் நினைவாக நடத்தப்பட்டன, இதில் தடகள போட்டிகள் மட்டுமல்லாமல் இசை, கவிதை மற்றும் நாடகம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

நவீன சகாப்தத்தின் முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஏதென்ஸில் ஏப்ரல் 1896 இல் நடந்தன. முதலாம் ஒலிம்பியாட் விளையாட்டு என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

 

1900 ஆம் ஆண்டில் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பங்கேற்பாளருடன் அறிமுகமானதிலிருந்து இந்தியாவின் ஒலிம்பிக் பயணம் கணிசமாக வளர்ந்துள்ளது. 1920-ஆம் ஆண்டில் ஆண்ட்வெர்ப் விளையாட்டுக்களில் இந்தியா தனது முதல் அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பியது, ஒரு குறிப்பிடத்தக்க சாதனைகளின் நூற்றாண்டைக் குறிக்கிறது.

 

1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் குறிப்பிடத்தக்க செயல்திறனால் இந்தியா தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது. 1930 கள் மற்றும் 40 களில் இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணியின் எழுச்சியைக் கண்டது, புகழ்பெற்ற தயான் சந்தின்  தலைமையின் கீழ் ஆம்ஸ்டர்டாம் 1928, லாஸ் ஏஞ்சல்ஸ் 1932 மற்றும் பெர்லின் 1936 இல்  முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று, உலகின் மேலாதிக்க ஹாக்கி சக்தி என்ற நற்பெயரை உறுதிப்படுத்தியது.

 

ஹாக்கியில் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகள் உட்பட எட்டு தங்கப் பதக்கங்கள், சுதந்திர இந்தியாவுக்கான கே.டி.ஜாதவின் வரலாற்று தனிநபர் பதக்கம், பெய்ஜிங் 2008 இல் அபினவ் பிந்த்ராவின் அற்புதமான தங்கம் மற்றும் டோக்கியோ 2020 இல் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க  தங்கப்பதக்கம்  என .பல தசாப்தங்களாக, இந்தியாவின் ஒலிம்பிக் வரலாறு குறிப்பிடத்தக்க சாதனைகளால்  முன்னிறுத்தப்பட்டுள்ளது.

 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, 16 விளையாட்டுப் பிரிவுகளில் 70 ஆண்கள், 47 பெண்கள் உட்பட 117 விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவை இந்தியா பெருமையுடன் அறிவித்தது. இந்த விளையாட்டு வீரர்கள் 69 நிகழ்வுகளில் போட்டியிட்டுமொத்தம் 95 பதக்கங்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

BR/KR

***



(Release ID: 2037491) Visitor Counter : 12


Read this release in: English , Hindi , Hindi_MP