கலாசாரத்துறை அமைச்சகம்
என் கிராமம், என் பாரம்பரியம் திட்டத்தின்கீழ் கிராமங்களின் வரைபடத்தை உருவாக்குவது மற்றும் ஆவணப்படுத்துவது
Posted On:
25 JUL 2024 6:30PM by PIB Chennai
கலாச்சாரத்தை படம்பிடிப்பதற்கான தேசிய இயக்கத்தின் மூலம், என் கிராமம், என் பாரம்பரியம் திட்டத்தின்கீழ், அனைத்து கிராமங்களின் வரைபடத்தையும் உருவாக்குவது மற்றும் ஆவணப்படுத்தும் பணிகளை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள்:
கலாச்சார அடையாளம் மற்றும் அதனை மேம்படுத்துவதன்மூலம், கலாச்சார பாரம்பரியத்தின் பலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது
6.5 லட்சம் கிராமங்களின் புவியியல், மக்கள் பரவல் விவரங்கள் மற்றும் தலைநகரங்களுடன் கலாச்சார அடிப்படையில் வரைபடத்தை உருவாக்குதல்
கலைஞர்கள் மற்றும் கலை நடைமுறைகளின் தேசிய பதிவை உருவாக்குவது
தேசிய கலாச்சார பணி இடமாக செயல்படும் வகையில் வலைதளம் மற்றும் மொபைல் செயலியை உருவாக்குவது
இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
SK/KR
***
(Release ID: 2037340)
Visitor Counter : 34