கலாசாரத்துறை அமைச்சகம்
பாரம்பரிய நினைவுச் சின்னங்களுக்கான நிதிஒதுக்கீடு
Posted On:
25 JUL 2024 6:32PM by PIB Chennai
நாட்டில் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் பகுதிகள் சட்டம், 1958-ன்கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக 3,697 பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பது, பராமரிப்பது, ஆகியவற்றுக்கான செலவினங்கள் மற்றும் மாநில வாரியாக உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை குறித்து இந்த இணைப்பில் பார்க்கலாம்.
பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் பகுதிகளை பாதுகாப்பது, மீட்பது மற்றும் பராமரிப்பது ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெறக் கூடியவை. இதனை இந்திய தொல்லியல ஆய்வுத் துறை வழக்கமாக மேற்கொண்டு வருகிறது. தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பாதுகாக்க வேண்டிய நினைவுச் சின்னங்களை அடையாளம் காண்பது, அதனை பாதுகாப்பது, சுற்றுலா வசதிகள்/ கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகிய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஆண்டு (2018-2023)
ஒதுக்கீடு
(ரூ.கோடியில்)
2018-19
8.10
2019-20
9.60
2020-21
7.25
2021-22
12.00
2022-23
19.95
இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
SK/KR
***
(Release ID: 2037331)
Visitor Counter : 59