கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கையெழுத்துப் பிரதிகள் இயக்கம்

प्रविष्टि तिथि: 25 JUL 2024 6:34PM by PIB Chennai

இந்தியாவின் பாரம்பரியமான கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்துவது, பாதுகாப்பது, டிஜிட்டல்மயமாக்குவது, ஆன்லைன் மூலம் வெளியிடுவது ஆகியவையே தேசிய கையெழுத்துப் பிரதி இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இலக்கை அடைவதற்காக இந்தியா முழுவதும் கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மையங்களையும், 100-க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதி ஆதார மையங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மையங்கள், கையெழுத்துப் பிரதி ஆதார மையங்கள் ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் வளமையான பாரம்பரிய கையெழுத்துப் பிரதிகளை பாதுகாப்பது, ஆவணப்படுத்துவது, வெளியிடுவது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விவரங்களை தற்போது காணலாம்:

நாடு முழுவதும் உள்ள 52 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கையெழுத்துப் பிரதிகளின் 9 கோடி தொகுப்புகளை பாதுகாத்துள்ளது.

3.5 கோடி பக்கங்களைக் கொண்ட 3.5 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணிமனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வலைதளத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில், 75 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களால் ஆன்லைனில் இலவசமாக பார்க்க முடியும்.

இது தொடங்கப்பட்டது முதல் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

 

 

இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் எழுத்துமூலம் பதிலளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

SK/KR

***


(रिलीज़ आईडी: 2037321) आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP