பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகளிர் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்கான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கை மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் நாளை நடத்துகிறது

प्रविष्टि तिथि: 25 JUL 2024 7:43PM by PIB Chennai

மகளிர் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்கான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கை மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் நாளை (26.7.2024) நடத்துகிறது.

பணி்யிடங்களில் மகளிர் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.

இதில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தொடக்க உரையாற்றவுள்ளார். 2024-25-ம் ஆண்டில், மகளிர்  நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக ரூ.3.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் அமைத்தல், மகளிர் பாதுகாப்பை உறுதி செய்தல், பணியிடத்தில் மகளிர் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் முயற்சிகளுக்கு இந்த நிதி  செலவிடப்படும்.

தில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் நாளை காலை 11 மணிக்கு இந்த இணையவழி கருத்தரங்கு தொடங்குகிறது.  இந்த நிகழ்ச்சியை https://webcast.gov.in/mwcd என்ற இணைய தளம் வழியாக அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037142

***

IR/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2037172) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP