சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாலிதீன் பைகளுக்கு கட்டாய தடை

Posted On: 25 JUL 2024 1:34PM by PIB Chennai

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021-12 ஆகஸ்ட் 2021 அன்று அறிவித்து, இது 2022 ஜூலை 1 முதல், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்கிறது. 2022 டிசம்பர் 31 முதல் 12 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகளின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு 60 கிராமுக்கும் குறைவாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் கேரி பைகளும் 2021 செப்டம்பர் 30 முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், திருத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-க்கு மேலாக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பிளாஸ்டிக் கேரி பைகள் / அல்லது அடையாளம் காணப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்வது தொடர்பான விதிமுறைகளை அறிமுகப்படுத்த அறிவிக்கைகள் / வெளியிடப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ வலுப்படுத்தவும், கண்டறியப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

(i) அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், திறமையான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்காகவும் தலைமைச் செயலாளர் / நிர்வாகி தலைமையில் சிறப்பு பணிக்குழுவை 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் அமைத்துள்ளன. அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ திறம்பட செயல்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்காக அமைச்சகத்தால் தேசிய அளவிலான பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

(ii) தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 120 மைக்ரான் தடிமனுக்கும் குறைவான தடிமன் கொண்டபிளாஸ்டிக் கைப்பைகள்தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வழங்காமல் இருப்பதற்காக சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 பிரிவு 5-ன் கீழ் பிளாஸ்டிக் மூலப்பொருள் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

(iii) அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மீதான தடையை திறம்பட கண்காணிக்க கீழ்க்கண்ட இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன (அ) விரிவான செயல் திட்ட அமலாக்கத்தை கண்காணிப்பதற்கான தேசிய டாஷ்போர்டு, (ஆ) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பு கையேடு மற்றும் (இ) மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் குறை தீர்க்கும் செயலி.

(iv) மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்/தனிநபர் சுழற்சி மையங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் ஜூலை 2022 முதல் அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்த நாடு தழுவிய அமலாக்க பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிடைத்த தகவல்களின்படி, அமலாக்க முகாம்களின் போது, மொத்தம் 853832 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 344689 வழக்குகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, தோராயமாக ரூ.19,05,13,471/- அபராதமும், 19,49,535 கிலோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

(v) பழங்கள் மற்றும் காய்கறி சந்தைகள், மொத்த சந்தைகள், உள்ளூர் சந்தைகள், மலர் விற்பனையாளர்கள், பிளாஸ்டிக் கைப்பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் 12 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள் அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 12 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு தடை விதிக்க வழக்கமான அமலாக்க இயக்கங்களை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

(vi) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகள் திட்ட வழிகாட்டுதல்களின்படி, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுகளைக் கண்டறியும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து மாற்று / பிற பொருட்களுக்கு மாறிய நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதும் இதில் அடங்கும்.

 

***

 


(Release ID: 2037063) Visitor Counter : 71


Read this release in: English , Urdu , Bengali , Telugu