உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்

Posted On: 24 JUL 2024 5:12PM by PIB Chennai

போதை இல்லாத இந்தியா இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு மேற்கொண்ட முயற்சிகள் போதைப் பழக்க வழக்குகளை சிறந்த முறையில் கண்டுபிடிக்க உதவியுள்ளன. 2022 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜம்மு & காஷ்மீரைப் பொறுத்தவரை 2020-2022 ஆம் ஆண்டில் போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985 இன் கீழ் தனிப்பட்ட பயன்பாடு / நுகர்வுக்காக மருந்துகள் வைத்திருப்பதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் பின்வருமாறு:

 

ஆண்டு

வழக்குகளின் எண்ணிக்கை

2020

289

2021

357

2022

394


ஆதாரம்: இந்தியாவில் குற்றம் 2022, NCRB.

போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உட்பட நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் பிரச்சினையை தடுப்பதற்காக நீடித்த மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

 

*****


 

(Release ID: 2036408)

PKV/KPG/KR


(Release ID: 2036922) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP