பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் பணிக்குழு தனது 3-வது கூட்டத்தை புதுதில்லியில் நடத்தியது
Posted On:
24 JUL 2024 3:14PM by PIB Chennai
ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் ராணுவ ஒத்துழைப்பை திட்டமிடுவதற்கான பணிக்குழு தனது 3-வது கூட்டத்தை 2024 ஜூலை 23-24 தேதிகளில் புதுதில்லியில் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு ஈடுபாடுகளை வலுப்படுத்துவது குறித்தும், தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறையின் கீழ் புதிய முயற்சிகள் குறித்து ஆலோசிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை இயக்குநரகம், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகம், சர்வதேச ராணுவ ஒத்துழைப்புக்கான பிரதான இயக்குநரகம் ஆகியவற்றுக்கு இடையேயான செயல்பாட்டு மட்டத்தில் வழக்கமான பேச்சுவார்த்தைகள் மூலம் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்காக நிறுவப்பட்ட ஒரு மன்றமே பணிக்குழுவாகும்.
----
(Release ID 2036312)
PKV/KPG/KR
(Release ID: 2036777)