அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மரவள்ளிக்கிழங்களிலிருந்து பயோபிளாஸ்டிக் நாகாலாந்தில் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துகிறது

Posted On: 24 JUL 2024 3:43PM by PIB Chennai

நாகாலாந்தின் மோகோக்சங் மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த சிறு விவசாயிகள் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்பட்ட மட்கக்கூடிய பயோபிளாஸ்டிக் (உயிரி நெகிழி) பைகளை பயன்படுத்துவதில் ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளனர்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று இலகுரக பொருட்கள் இல்லாததால், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், வடகிழக்கு தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ரீச் மையம் மரவள்ளி ஸ்டார்ச்சிலிருந்து (மணிஹாட் எஸ்குலெண்டா) மக்கும் பயோபிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் முயற்சியை ஆதரித்துள்ளது.

நாகாலாந்தைத் தளமாகக் கொண்ட எம்.எஸ்.எம்.இ நிறுவனமான எகோஸ்டார்ச், நாகாலாந்தின் மோகோக்சுங்கில் உள்ள மரவள்ளி ஆலையிலிருந்து பயோபிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் வசதியை அமைத்துள்ளது, மேலும் உற்பத்தி நிலையத்திலிருந்து 30-40 கி.மீ வரம்பிற்குள் உள்ள விவசாயிகளை மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறது. விவசாயிகள் ஏற்கனவே பொருட்களை நடவு செய்யத் தொடங்கிவிட்டனர், சுமார் ஒரு வருடத்தில் அது அறுவடைக்கு தயாராகிவிடும்.

யூனிட்டின் தற்போதைய உற்பத்தி திறன் மாதத்திற்கு சுமார் 3 டன் ஆகும்.

இதன் மூலம், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கும் 'மரவள்ளி கிராமம்' ஊக்குவிக்கப்படுகிறது. மரவள்ளி வளர்ப்பு மூலம் அவர்களுக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை வழங்க விவசாய குழுக்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மரவள்ளி சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன், பயனுள்ள விவசாய உள்ளீடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

****

(Release ID: 2036338)

PKV/KPG/KR



(Release ID: 2036758) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP