கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு சங்கங்கள் விரிவாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2024 5:26PM by PIB Chennai
நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் திறனை விரிவுபடுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருவதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கல் மூலம் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் பணியை தேசிய அளவில், நபார்டு வங்கி மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவு சங்க மேம்பாட்டிற்கு மாநிலம் வாரியாக ஒதுக்கப்பட்ட தொகை விவரத்தையும் அவர் பட்டியலிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் 22,057 கூட்டுறவு சங்கங்களும், புதுச்சேரியில் 458 சங்கங்களும் உள்ளன. இந்த சங்கங்களை கணினிமயமாக்க கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 45,68,20,000 ரூபாயும், புதுச்சேரிக்கு 60,75,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் மத்திய அரசின் பங்காக முறையே 81,92,106 ரூபாய் மற்றும் 3,89,630 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தவிர தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் வாயிலாகவும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036421
***
MM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2036522)
வருகையாளர் எண்ணிக்கை : 99