புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாதிரி அமைப்பிற்கான வழிகாட்டும் குழு அமைப்பு

प्रविष्टि तिथि: 24 JUL 2024 2:45PM by PIB Chennai

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் தேசிய மாதிரி ஆய்வுப் பணியின் போது, அவ்வப்போது கிடைக்கும் ஆய்வு முடிவுகள் / வழிமுறைக் கேள்விப்பட்டியல் அடிப்படையில் எழுப்பப்படும் பிரச்சனைகளை மறு ஆய்வு செய்வதற்காக, வழிகாட்டும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் ராஜீவா லட்சுமணன் கரன்டிகர் தலைமையிலான இந்தக் குழுவில், நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற புள்ளியியல் கல்வி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, நித்தி ஆயோக் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 17 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036289

***

MM/KPG/RR/DL


(रिलीज़ आईडी: 2036460) आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP