சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஓடும் வாகனங்களில் தீ விபத்துக்களை தடுப்பது குறித்து ஆய்வு

Posted On: 24 JUL 2024 1:55PM by PIB Chennai

ஓடும் வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக:கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த அமைச்சகத்திற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, பேட்டரியில் இயங்கும் வாகனங்களில் சில தீ விபத்துகளும், ஸ்லீப்பர் கோச் பேருந்துகளில் ஒரு தீ விபத்தும் ஏற்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களில் தீ விபத்து சம்பவங்களை அடுத்து, மின்சார வாகனங்களில் பேட்டரி மற்றும் அதன் கூறுகள், பிஎம்எஸ் (பேட்டரி மேலாண்மை அமைப்பு) மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்கான பாதுகாப்பு தரங்களை உருவாக்க பரிந்துரைக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மின்கலம் மற்றும் மின்சார வாகனங்களின் தொடர்புடைய பாகங்களுக்கான பாதுகாப்பு தரங்கள் மற்றும் மின்கல பேக்குகளுக்கான தொழில்நுட்ப தேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் பின்பற்றுவதற்கான தரங்களை இந்த அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களை அடுத்து ஸ்லீப்பர் பெட்டிகள் (ஏஐஎஸ் 119) தொடர்பான தரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

***

(Release ID: 2036269)
PKV/RR



(Release ID: 2036348) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi