புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய இந்தியாவைப் படைப்பதற்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் மத்திய பட்ஜெட்: திரு பிரலாத் ஜோஷி

प्रविष्टि तिथि: 23 JUL 2024 8:14PM by PIB Chennai

மத்திய பட்ஜெட், புதிய இந்தியாவைப் படைப்பதற்கான  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன், இந்தியாவின்,  குறிப்பாக, இளைஞர்களின் திறமையில் நம்பிக்கை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்  திரு  பிரலாத் ஜோஷி பாராட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க  வழிகாட்டும் விதமாக  பட்ஜெட் தயாரித்ததற்காக,  பிரதமர் திரு நரேந்திர மோடி, மற்றும் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சூரியசக்தி மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நடுத்தர வகுப்பினர், குறைந்த நடுத்தர வகுப்பினர் மற்றும் ஏழைகளுக்கு பலன் அளிப்பதுடன், உலகிலேயே மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்றாக  உருவெடுத்துள்ளது என்றும் திரு பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2036075)

MM/KPG/KR


(रिलीज़ आईडी: 2036239) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP