நிதி அமைச்சகம்
மத்திய பட்ஜெட் 2024-25: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதியை ஊக்குவிக்கும்
Posted On:
23 JUL 2024 8:21PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் 2024-25 குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒடுக்கட்டப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2014 முதல் அமைக்கப்பட்ட அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இந்த பட்ஜெட், 'வளர்ந்த இந்தியாவை' நோக்கிய பயணத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்த அனைத்து இந்தியர்களின் திறன்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
வேலைவாய்ப்பை அதிகரிப்பது, திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துவது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது, நடுத்தர வர்க்கத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான வலுவான தீர்மானத்தை இந்த ஆண்டு பட்ஜெட் வெளிப்படுத்துகிறது.
மேலும், விவசாயம் முதல் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் வரை முக்கியமான பகுதிகளை உள்ளடக்கிய ஒன்பது முக்கிய முன்னுரிமைகளையும் இது கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முன்னுரிமைகள், வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை பிரதிபலிப்பதுடன், வளர்ச்சியை உள்ளடக்கியதாகவும், நீடித்ததாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன.
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா நகர்ந்து வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டின் முன்னுரிமை 3, "உள்ளடக்கிய மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி" மீது கவனம் செலுத்துகிறது, இது ஒடுக்கட்டப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதையும், சமநிலையான பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல முக்கிய முயற்சிகளை கோடிட்டுக் காட்டுகிறது.
தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து பயனடைவதை உறுதி செய்வதற்கான நிறைவுநிலை அணுகுமுறையை அரசு வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகள் மூலம் திறன்களை மேம்படுத்துவதையும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பெண் தொழில்முனைவோர் மற்றும் சாலையோர விற்பனையாளர்கள் மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக பிரதமரின் விஸ்வகர்மா, பிரதமரின் ஸ்வநிதி, தேசிய வாழ்வாதார இயக்கங்கள் மற்றும் ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
பிர்பெண்டியில் புதிய 2400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் உட்பட மின் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்படும். கூடுதல் உள்கட்டமைப்பு திட்டங்களில் பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு மையங்கள் ஆகியவை அடங்கும்.
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த லட்சிய திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு ரூ .3 லட்சம் கோடிக்கு மேல் குறிப்பிடத்தக்க ஒதுக்கீடு பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இணைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மூலம் கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை இந்த ஒதுக்கீடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2024-25, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான விரிவான மற்றும் லட்சிய அணுகுமுறையை முன்வைக்கிறது. பல்வேறு ஒடுக்கட்டப்பட்ட குழுக்களைக் கருத்தில் கொண்டு பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதன் மூலம், அரசு மிகவும் சமத்துவமான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2036076)
PKV/BR/KR
(Release ID: 2036238)