இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பள்ளிகளில் விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

Posted On: 22 JUL 2024 7:13PM by PIB Chennai

மக்களவையில் 'பள்ளிகளில் விளையாட்டு செயல்பாடுகளை ஊக்குவிப்பது' குறித்த கேள்விக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பின்வருமாறு தெரிவித்தார்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பழங்குடியின குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த சூழலில் தரமான கல்வியை வழங்குவதற்காக ஏகலைவ மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி என்ற மத்திய அரசின் திட்டத்தை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் 2018-19 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 50% க்கும் அதிகமான பழங்குடியினர் மற்றும் குறைந்தபட்சம் 20,000 பழங்குடியினர் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) உள்ள வட்டங்களில் ஒரு பள்ளி நிறுவப்பட வேண்டும்.

அதன்படி, நாடு முழுவதும் 740  ஏகலைவ மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்க அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கூடுதலாக, பழங்குடியின மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிப்பதற்கும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதற்கும், இந்தப் பள்ளிகளில் 15 சிறப்பு விளையாட்டு மையங்களை அமைக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கல்வி, விளையாட்டு மற்றும் உடற்கல்வி அமைச்சகத்தின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், பள்ளிகளில் விளையாட்டு, உடற்கல்வி செயல்பாடுகள், யோகா, இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க, தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5,000 வீதமும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10,000 வீதமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.25,000 வீதமும் ஆண்டொன்றுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு மானியத்தின் கீழ் ரூ.812.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செயல்படாத பள்ளியின் உபகரணங்களை வாங்குவதற்கும், விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், உட்புற நடவடிக்கைகள் போன்றவற்றைப் பராமரித்தல் உள்ளிட்ட பிற தொடர்ச்சியான செலவுகளுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது.

***

(Release ID: 2035318)
PKV/BR/KR



(Release ID: 2036235) Visitor Counter : 32


Read this release in: English , Hindi