தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்

प्रविष्टि तिथि: 22 JUL 2024 6:46PM by PIB Chennai

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்க, கீழ்க்கண்ட நலத்திட்டங்களை உருவாக்கி அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008-ஐ அரசு செயல்படுத்தி வருகிறது: (i) ஆயுள் மற்றும் ஊனத்திற்கான காப்பீடு; (ii) உடல்நலம் மற்றும் மகப்பேறு நலன்கள்; (iii) முதியோர் பாதுகாப்பு; மற்றும் (iv) மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் வேறு ஏதேனும் நன்மை ஆகியவை இதில் அடங்கும்.

சந்தாதாரர்களின் பங்களிப்பின் அடிப்படையில் பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் ஆயுள் மற்றும் ஊனமுற்றோர் காப்பீடு கிடைக்கிறது. 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்ட பயன்கள் கிடைக்கிறது. மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் இறப்பு ஏற்பட்டால், ஆண்டு பிரீமியம் ரூ .436 / -க்கு ரூ .2.00 லட்சம்  காப்பீடு வழங்கப்படுகிறது. பிரதமரின் விபத்து காப்பீட்டுத்  திட்டம் 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு விபத்தினால்  மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ .2.00 லட்சமும், நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ .1.00 லட்சமும் ஆண்டு பிரீமியம் ரூ .20 செலுத்துவதன் மூலம் கிடைக்கிறது.

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைக்காக தகுதியான குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

முதியோர் சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்திய அரசு 2019 இல் பிரதமரின் ஷ்ரம் யோகி மான்-தன் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.3000/- ஓய்வூதியம் வழங்குகிறது. மாத வருமானம் ரூ.15000/- அல்லது அதற்கும் குறைவாக உள்ள 18-40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர பங்களிப்புத் தொகையில் 50 சதவீதத்தை பயனாளியும், அதற்கு இணையான பங்களிப்புத் தொகையை மத்திய அரசும்  செலுத்துகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2035275)
PKV/BR/KR


(रिलीज़ आईडी: 2036234) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu