வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

வீடில்லாத மக்கள்

Posted On: 22 JUL 2024 5:53PM by PIB Chennai

நாட்டில் வீடில்லாத மக்களையும் உள்ளடக்கிய இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்தாண்டு அடிப்படையில்  மேற்கொள்ளப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,நாட்டின் நகர்ப்புறங்களில் மொத்தம் 9,38,348 பேர் வீடு இல்லாதவர்கள்.

'நிலம்' மற்றும் 'குடியேற்றம்' ஆகியவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருபவையாகும். எனவே, வீடற்றவர்கள் உள்ளிட்ட தங்கள் குடிமக்களுக்கான வீட்டுவசதி தொடர்பான திட்டங்கள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 25, 2015 முதல் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில்  உறுதியான வீடுகளை வழங்க  பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்  கீழ் மத்திய உதவியை வழங்குவதன் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு துணைபுரிகிறது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், இதுவரை 1.18 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வீடுகளில், 114.33 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன, அவற்றில் 85.04 லட்சத்திற்கும் அதிகமானவை முடிக்கப்பட்டுள்ளன / தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.  பிரதமரின்  வீட்டுவசதித் திட்டத்தின் அமலாக்க காலம் 25.06.2015 முதல் 31.03.2022 வரை இருந்தது, கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம், நிதி முறை மற்றும் செயல்படுத்தல் முறையை மாற்றாமல் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் முடிக்க 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தீன்தயாள் அந்த்யோதயா  திட்டம்- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில்  வீடற்றவர்களுக்கு குடிநீர் வழங்கல், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட நிரந்தர தங்குமிடங்கள் கிடைப்பதையும் அணுகுவதையும் உறுதி செய்வதற்காக நகர்ப்புற வீடற்றோருக்கான உறைவிடத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டில் நகர்ப்புற வீடற்றவர்களுக்காக இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1.41 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடவசதியுடன் கூடிய 1,986 பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035215

 

***

PKV/BR/RR/KR

 



(Release ID: 2036232) Visitor Counter : 30


Read this release in: English , Hindi