வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல் - மத்திய பட்ஜெட் 2024-25-ல் நகர்ப்புற மேம்பாட்டுக்கான அறிவிப்புகள்

Posted On: 23 JUL 2024 6:52PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று நகர்ப்புற மேம்பாடு ஆகும். இது நகர்ப்புற வீட்டுவசதி, வாடகை வீட்டு வசதிகள், நகர திட்டமிடல், நீர் வழங்கல், சுகாதாரம், சாலையோர வியாபாரிகளுக்கான போன்றவை தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அதிகம் இடம்பெற்றுள்ளன.

மத்திய பட்ஜெட் 2024-25-ல் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மூன்று கோடி கூடுதல் வீடுகள் கட்டுவதற்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற, நகர்ப்புற என இரு பகுதிகளிலும் வீட்டு வசதித் திட்டத்தை உள்ளடக்கியது.

வாடகை வீடுகள்

தொழிலாளர்களுக்கு வாடகை வீடுகளை ஏற்படுத்தித் தருவது குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  வெளிப்படையான வாடகை வீட்டுச் சந்தைகளை உறுதி செய்வதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படும்.  

வளர்ச்சி மையங்களாகும் நகரங்கள்

போக்குவரத்து திட்டமிடல், நகர திட்டமிடல் திட்டங்களைப் பயன்படுத்தி புறநகர் பகுதிகளின் சீரான வளர்ச்சி மூலம் நகரங்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்க மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 30 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட 14 பெரிய நகரங்களில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நீர் வழங்கல், சுகாதாரம்

மாநில அரசுகள், வளர்ச்சி வங்கிகளுடன் இணைந்து, 100 பெரிய நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்.

நகர்ப்புற வளர்ச்சியில் மத்திய பட்ஜெட் 2024-25 அதிக கவனம் செலுத்துவது, மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. கணிசமான முதலீடுகள் மூலம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், நாடு முழுவதும் நிலையான நகரமயமாக்கலை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

 

PLM/DL



(Release ID: 2036072) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP