விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமரின் தொலைநோக்கு மற்றும் உறுதிப்பாடுகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன: திரு சௌஹான்

Posted On: 23 JUL 2024 5:00PM by PIB Chennai

மத்திய பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சி, ஏழைகள் நலன் மற்றும் அமிர்த காலத்திற்கான பட்ஜெட் என, மத்திய வேளாண், விவசாயிகள்  நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்கள் இந்தியாவின் ஆன்மாவாகவும், விவசாயிகள் அதன் உயிராகவும், திகழ்வதை அடிப்படையாகக் கொண்ட இந்த பட்ஜெட்டில், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம்  வேளாண் விளை பொருள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், இடுபொருள் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டப்படும் எனவும் திரு சௌஹான் கூறியுள்ளார்.

3 கோடி பெண்களை  கோடீஸ்வரர்களாக்கும் நோக்குடன், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு உலகளாவிய, சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய பட்ஜெட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2035877)

MM/AG/DL


(Release ID: 2035985) Visitor Counter : 62