பிரதமர் அலுவலகம்

2024-25 பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து

"வளர்ந்த பாரதத்திற்கான பட்ஜெட் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிப்பதுடன் வளர்ந்த இந்தியாவுக்கு வழி வகுக்கிறது"

"வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்”.

"இந்தப் பட்ஜெட் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய உயரத்தைக் கொண்டு வந்துள்ளது"

"ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தொழில்முனைவோரை உருவாக்குவோம்"

"கடந்த 10 ஆண்டுகளில், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு தொடர்ந்து வரி நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது"

"புத்தொழில் புத்தாக்க சூழலுக்கான புதிய வழிகளை பட்ஜெட் திறக்கிறது"

"பட்ஜெட் விவசாயிகள் நலனில் பெரிய அளவில் கவனம் செலுத்துகிறது"

"இன்றைய பட்ஜெட் புதிய வாய்ப்புகள், புதிய ஆற்றல், புதிய வேலைவாய்ப்பு, சுய வேலை வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. இது சிறந்த வளர்ச்சியையும் பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டு வந்துள்ளது"

இன்றைய பட்ஜெட் இந்

Posted On: 23 JUL 2024 2:54PM by PIB Chennai

மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

 

2024-25 மத்திய பட்ஜெட் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள பிரதமர், இந்த ஆண்டின் பட்ஜெட் நாட்டை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது என்று கூறி, அனைத்து கமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், அவரது ஒட்டுமொத்த குழுவினர் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் கூறினார்.

 

"மத்திய பட்ஜெட் 2024-25, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கும்", "இது கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகளை செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்லும்" என்று பிரதமர் கூறினார். 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்ட பிறகு, புதிய நடுத்தர வர்க்கம் உருவெடுத்திருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நிதிநிலை அறிக்கை அவர்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்ச்சியை சேர்ப்பதுடன், எண்ணற்ற வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது என்று கூறினார். இந்த பட்ஜெட் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய உயரத்தைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார். நடுத்தர வகுப்பினர், பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வாழ்க்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பட்ஜெட் அதன் புதிய திட்டங்களுடன் இருப்பதை பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தப் பட்ஜெட் பெண்களின் பொருளாதாரக் கூட்டாண்மையை உறுதி செய்யும் அதே வேளையில், சிறு வணிகங்கள், எம்.எஸ்.எம்.இ. ஆகியவற்றுக்கு ஒரு புதிய பாதையையும் அமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். "மத்திய பட்ஜெட் உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார், இது தொடர்ச்சியைப் பராமரிக்கும் போது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பலத்தை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பிஎல்ஐ திட்டத்தின் வெற்றியைக் குறிப்பிட்டு, கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கும் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ், ஒரு இளைஞரின் முதல் வேலையின் முதல் சம்பளம் அரசால் ஏற்கப்படும். உயர்கல்விக்கான ஏற்பாடுகள், ஒரு கோடி இளைஞர்களுக்கான உள்ளகப் பயிற்சித் திட்டம் ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். "இத்திட்டத்தின் கீழ் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலம், இளம் பயிற்சியாளர்கள் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்" என்று பிரதமர் கூறினார்.

 

ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை அரசு கொண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பிணையற்ற கடன்களின் வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்துவதை சுட்டிக்காட்டினார்.

 

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் நடுத்தர வர்க்கத்தினருடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொண்டுள்ள தொடர்பையும், ஏழைப் பிரிவினருக்கு அதன் வேலைவாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். சிறு தொழில்களுக்கு பெரிய பலத்தை உருவாக்க, எம்.எஸ்.எம்.இ.களுக்கு எளிதான கடன் வழங்குவதை அதிகரிக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டம் குறித்து பிரதமர் தெரிவித்தார். "பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை எடுத்துச் செல்லும்" என்று கூறிய அவர், "இ-காமர்ஸ், ஏற்றுமதி மையங்கள், உணவு தரச் சோதனை ஆகியவை ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு திட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்" என்றார்.

 

மத்திய பட்ஜெட் 2024-25, இந்தியாவின் ஸ்டார்ட்அப், புத்தாக்கச் சூழல் அமைப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். விண்வெளிப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க 1000 கோடி ரூபாய் தொகுப்பு நிதி, ஏஞ்சல் வரியை ரத்து செய்தல் ஆகியவற்றை அவர் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.

 

12 புதிய தொழில்துறை முனையங்கள், புதிய செயற்கைக்கோள் நகரங்கள், 14 பெரிய நகரங்களுக்கான போக்குவரத்து திட்டங்கள் ஆகியவற்றுக்கான வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிட்ட பிரதமர், "சாதனை படைத்த உயர் மூலதனச் செலவு பொருளாதாரத்தின் உந்து சக்தியாக மாறும்" என்று கூறினார். இது நாட்டில் புதிய பொருளாதார மையங்களை உருவாக்கவும், ஏராளமான வேலைகளை உருவாக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

 

சாதனை படைத்த பாதுகாப்பு ஏற்றுமதியை எடுத்துரைத்த பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 'தற்சார்பை' பாதுகாப்புத் துறையில் உருவாக்க ஏராளமான ஏற்பாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டார். இந்தியா மீதான உலகத்தின் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சுற்றுலாத் துறை ஏழைகள், நடுத்தரப் பிரிவினர் ஆகியோருக்கு ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது என்றார்

கடந்த 10 ஆண்டுகளில், ஏழைகள்,  நடுத்தரப் பிரிவு மக்களுக்கு வரி நிவாரணத்தை அரசு உறுதி செய்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார், அதே நேரத்தில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரியைக் குறைத்தல், நிலையான கழிவை உயர்த்துதல், டிடிஎஸ் விதிகளை எளிமைப்படுத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் வரி செலுத்துவோர் அதிக பணத்தைச் சேமிக்க அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.

 

பூர்வோதயா தொலைநோக்கு திட்டத்தின் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு புதிய உத்வேகமும், சக்தியும் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

"இந்தப் பட்ஜெட்டில் நாட்டின் விவசாயிகள் மீது பெரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது" என்று பிரதமர் கூறினார். உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்திற்குப் பிறகு, இப்போது காய்கறி உற்பத்தி தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இது விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவும். விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டியது காலத்தின் தேவை. எனவே, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

 

வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான முக்கிய திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டுவது பற்றியும், 5 கோடி பழங்குடியின குடும்பங்களை அடிப்படை வசதிகளுடன் இணைக்கும் பழங்குடியினர் உன்னத கிராம இயக்கம் பற்றியும் தெரிவித்தார். மேலும், கிராம சாலைகள் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில், 25,000 புதிய கிராமப்புறப் பகுதிகளை அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலைகளுடன் இணைக்கும் என்று அவர் கூறினார்.

 

"இன்றைய நிதிநிலை அறிக்கை புதிய வாய்ப்புகள், புதிய எரிசக்தி, புதிய வேலைவாய்ப்பு, சுய வேலை வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. இது சிறந்த வளர்ச்சியையும் பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டு வந்துள்ளது. இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கும், வளர்ந்த பாரதம் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதற்கும் இந்த பட்ஜெட் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2035709)
VL/PKV/RR/KR



(Release ID: 2035925) Visitor Counter : 15