எஃகுத்துறை அமைச்சகம்
பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் திரு ஜடோத்து உசேன், ஆர்.ஐ.என்.எல் மற்றும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் பழங்குடியினர் நலச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்
Posted On:
21 JUL 2024 9:30AM by PIB Chennai
விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் உள்ள மனிதவள மேம்பாட்டு மையமான நாகார்ஜுனாவில் நேற்று (20.7.2024) நடைபெற்ற கூட்டத்தில், புதுதில்லி தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் திரு ஜடோத்து ஹுசைன், ஆர்ஐஎன்எல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு அதுல் பட் , இயக்குநர்கள், பிற மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் எஸ்.சி., மற்றும் எஸ்.டி ஊழியர்களின் நலனுக்காக ஆர்.ஐ.என்.எல் நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பழங்குடியினருக்கான தேசிய ஆணைய உறுப்பினர் திரு ஜடோத்து ஹுசைன் பாராட்டினார்.
விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் (வி.எஸ்.பி) எஸ்.சி மற்றும் எஸ்.டி ஊழியர்கள் நலச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் உரையாடிய திரு ஜடோத்து ஹுசைன், எஸ்.சி மற்றும் எஸ்.டி ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். எஸ்.டி ஊழியர்கள் நலச் சங்கத்திடமிருந்து கோரிக்கை மனுவை அவர் பெற்றார்.
***
PKV/DL
(Release ID: 2034754)
Visitor Counter : 67